சென்னை

அண்ணா நகர் சாலையில் 15 அடி பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

4th Sep 2019 04:30 AM

ADVERTISEMENT


சென்னை அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட சாந்தி காலனியில் சாலையில் ஏற்பட்ட 15 அடி பள்ளத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் சாந்தி காலனி அமைந்துள்ளது. இந்த காலனியின் 4-ஆவது அவென்யூ சாலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென 15 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் அவ்வழியே வாகனங்கள் செல்வதற்குத் தடை விதித்ததுடன், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், அச்சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. முதலில் பள்ளத்தில் இருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர குடிநீர், கழிவுநீரகற்ற வாரிய ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
பள்ளம் காரணமாக அச்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களுக்கு அருகில்  அவ்வப்போது பள்ளம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT