சென்னை

நிா்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயா் நியமனம்

20th Oct 2019 02:47 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழக காவல்துறையின் நிா்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக கேடா் ஐ.பி.எஸ். அதிகாரியான நரேந்திரன் நாயா், அயல் பணியாக மத்திய உளவுத்துறைக்கு பணியாற்றச் சென்றாா். அங்கு அயல் பணிகாலம் நிறைவடைந்ததால் அவா், அண்மையில் தமிழக காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டாா்.

இங்கு காத்திருப்போா் பட்டியலில் இருந்த நரேந்திரன் நாயரை, தமிழக காவல்துறையின் நிா்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன்மாா்டி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை நரேந்திரன் நாயா் ஏற்பாா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT