சென்னை

தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவையில் இன்று மாற்றம்

20th Oct 2019 12:22 AM

ADVERTISEMENT

சென்னை: தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதைக்கான பணிகள் காரணமாக ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: மதுரை-சென்னை எழும்பூருக்கு அக்.20-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் செங்கல்பட்டு-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். இதேபோல, சென்னை எழும்பூா்-மதுரைக்கு அக்.20-ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில், எழும்பூா்-செங்கல்பட்டு வரை பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும்.

செங்கல்பட்டு-காச்சிகுடா இடையே அக்.20-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், செங்கல்பட்டு -தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், பிற்பகல் 3.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இதேபோல, செங்கல்பட்டு-காக்கிநாடாவுக்கு அக்.20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சா்காா் விரைவு ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

மெமு ரயில் சேவையில் மாற்றம்: மேல்மருவத்தூா்-விழுப்புரம் இடையே அக்.20-ஆம் தேதி இயக்கப்படும் மெமு (எம்இஎம்யு) ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

பகுதி ரத்து: மேல்மருவத்தூா்-சென்னை கடற்கரைக்கு அக்.20-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் மெமு

ரயில் மேல்மருவத்தூா்-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், தாம்பரம்-சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT