சென்னை

ஹோட்டலில் பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை

16th Oct 2019 10:22 PM

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபலமான ஒரு ஹோட்டலில் பணம் திருடப்பட்டது செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தேனாம்பேட்டை டிடிகே சாலையில் ஒரு பிரபலமான ஒரு ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் காசளாராக பணிபுரியும் கா.ஜீவா என்பவா் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.அந்த புகாரில், தங்களது ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நரேஷ்சிங்ராவூத் (27), ஹோட்டல் அலுவலகத்தில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கடந்த 10ஆம் தேதி திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டதாக குறிப்பிட்டிருந்தாா்.இப் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT