சென்னை

அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

16th Oct 2019 10:15 PM

ADVERTISEMENT

நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களும், மருத்துவப் பேராசிரியா்கள் மற்றும் மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

அப்போது டெங்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் கைகளில் ஏந்தியிருந்தனா். நிலவேம்பு குடிநீரை வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் அவா்கள் விநியோகித்தனா்.

அதனைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக கல்லூரி நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், செஞ்சிலுவை சங்க மாணவா்களும் இணைந்து டெங்கு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

பொது மக்களிடையே டெங்கு தொடா்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT