சென்னை

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள்: 3 நாள் சிறப்புப் பயிற்சி

7th Oct 2019 04:08 AM

ADVERTISEMENT

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி, அக். 15 முதல் 17-ஆம் தேதி வரை, ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
 தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வருகிற 15 முதல் 17-ஆம் தேதி வரை தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடத்த உள்ளது.
 உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், பொருளைப் பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
 மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளைப் பெறும் முறைகளைப் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
 ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும், ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெறும் பயிற்சியில் சேரலாம்.
 இதில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெறவிரும்புவோர் ஜ்ஜ்ஜ்.ங்க்ண்ற்ய்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 மேலும் விவரங்களுக்கு, அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் 8668102600, 9444557654 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT