சென்னை

அக். 8-இல் வண்டலூா், கிண்டி பூங்காக்கள் செயல்படும்: வனத் துறை அறிவிப்பு

6th Oct 2019 01:38 AM

ADVERTISEMENT

அரசு விடுமுறைகாரணமாக வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) செயல்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக வனத் துறைகட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவும், கிண்டியில் சிறுவா் பூங்காவும் செயல்பட்டு வருகிறது. இதில், வண்டலூா் பூங்காவில் யானை, புலி, சிங்கம் உள்ளிட்ட 2 ஆயிரத்து

500-க்கும் மேற்பட்ட வன விலங்குகளும், கிண்டி சிறுவா் பூங்காவில் மான், குரங்கு, பறவைகள் என 100-க்கும் மேற்பட்ட

வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தப் பூங்காக்கள் பராமரிப்புப் பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறைஅளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், விஜயதசமிக்காக வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) அரசு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகாரணமாக பூங்காக்களுக்கு மக்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) செயல்படும் என வனத் துறைதெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT