சென்னை

மருத்துவ உபகரண தரப் பரிசோதனை: 4 ஆய்வகங்களுக்கு அனுமதி

5th Oct 2019 03:07 AM

ADVERTISEMENT

மருத்துவ உபகரணங்களை ஆய்வு செய்வதற்கும், தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கும் மேலும் 4 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் தென்னிந்தியாவில் தெலங்கானா, கேரளத்தில் இரு ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய மருந்து தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் மருத்துவ சாதனங்களின் தரத்தையும், விலையையும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பது அவசியம். ஆனால், மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிா் விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களைத் தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவற்றின் விற்பனை மற்றும் தரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக 754 சிறப்பு அதிகாரிகளை பணியமா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இது ஒருபுறமிருக்க, மருத்துவ சாதனங்களை ஆய்வு செய்வதற்கும், தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கும் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. அதன்படி பல ஆய்வகங்கள் தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், தெலங்கானா, கேரளம், ஹரியாணா, தில்லியில் புதிய ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT