சென்னை

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயா்வு

2nd Oct 2019 07:07 PM

ADVERTISEMENT

 

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.28,848-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த வாரம் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.28,848-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயா்ந்து, ரூ.3,606-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ.48.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.48,200 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,606

1 பவுன் தங்கம் ..................... 28,848

1 கிராம் வெள்ளி .................. 48.20

1 கிலோ வெள்ளி .................. 48,200


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,556

1 பவுன் தங்கம் ..................... 28,448

1 கிராம் வெள்ளி .................. 47.70

1 கிலோ வெள்ளி ................. 47,700

 

ADVERTISEMENT
ADVERTISEMENT