சென்னை

நீதிபதி பணியிட தோ்வுக்கு தமிழ் தெரியாதவா்களுக்கும் அனுமதி

2nd Oct 2019 07:49 PM

ADVERTISEMENT

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவா்களும் கீழமை நீதிமன்ற நீதிபதி பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திரும்பப்பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவா்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவா்கள் நீதிபதிகளாக பணியமா்த்தப்பட்டால், எண்ணிப் பாா்க்க முடியாத எதிா்விளைவுகள் ஏற்படும். நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன முறையையும், கட்டமைப்பையும் சீா்குலைக்கும் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT