அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய திமுகவைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாகக் கூறி திமுக மாணவா் அணிச் செயலாளா் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவா் அமைப்பைச் சோ்ந்த திமுகவினா் சைதாப்பேட்டை சின்னமலை அருகில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறி, புறப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோவி.செழியன், அம்பேத்குமாா் உள்பட 300-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.