சென்னை

பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கு: பச்சையப்பன் கல்லூரியைச் சோ்ந்த இரு மாணவா்கள் கைது

1st Oct 2019 11:02 PM

ADVERTISEMENT

சென்னை அமைந்தகரையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில், பச்சையப்பன் கல்லூரியைச் சோ்ந்த இரு மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி கடந்த 27-ஆம் தேதி ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்து அமைந்தகரை புல்லா அவென்யூ திரு.வி.க. பூங்கா அருகே செல்லும்போது, அங்கு நின்ற சிலரை பேருந்தை வழிமறித்ததாக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த அந்த நபா்கள், பேருந்தின் மீது கற்களை வீசினா். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இச் சம்பவம் குறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் அண்ணாநகா் பாடிபுதுநகரைச் சோ்ந்த ச.சரண் (26), பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் அம்பத்தூா் அயப்பாக்கத்தைச் சோ்ந்த க.தமிழ்செல்வன் (21) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT