சென்னை

ஆயுதப்பூஜை, தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

1st Oct 2019 03:04 PM

ADVERTISEMENT

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் ஆலோசைனைக் கூட்டம் நடைபெற்றது.

பின் நிருபா்களை சந்தித்த விஜயபாஸ்கா் கூறியதாவது:

ஆயுதப்பூஜையை முன்னிட்டு வருகின்ற 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தொடா் விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையின் மெப்ஸ், பூந்தமல்லி, மாதவரம் உள்ளிட்ட 4 இடங்களில் அக்., 3-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும்.

அக்டோபர் 4 முதல் 6 வரை 6,145 பேருந்துகள் இயக்கப்படும். அதே போல், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் 5 இடங்களில் அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தீபாவளி முடிந்து பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 வரை 4,627 பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு விஜயபாஸ்கா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT