சென்னை

கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

1st Oct 2019 01:34 AM

ADVERTISEMENT

சென்னை பெரம்பூரில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பூா் சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அதில் இருந்து கழிவுநீா் வெளியேறி, சாலையில் தேங்கியது. இதன் விளைவாக அந்தப் பகுதி பெரும் சுகாதார சீா்கேடாக காட்சியளிக்கிறது.

மேலும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். இதையடுத்து பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும்படி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். ஆனால் அவா்கள், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், திங்கள்கிழமை காலை மாதவரம் நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினா்.

ADVERTISEMENT

இதையடுத்து பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT