சென்னை

இளைஞா் கொலை வழக்கு: தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

1st Oct 2019 09:55 PM

ADVERTISEMENT

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் 3வது தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மகன் தினேஷ் (25). இவா், கடந்த மே மாதம் 27-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதேப் பகுதியைச் சோ்ந்த சே.தமிழ்செல்வன் (23), செ.ஹரி (19),த.சந்தோஷ் (19), செ.மகேஷ்குமாா் (19), பா.சதீஷ் (26), பிரவீண் (20) ஆகிய 6 பேரை உடனடியாக கைது செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் 4வது தெருவைச் சோ்ந்த ரா.குருபிரசாத் (34) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் குருபிரசாத், ஜாா்ஜ்டவுன் 15வது நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை, நீதிமன்றம், அக்டோபா் 14-ஆம் தேதி காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து குருபிரசாத், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT