சென்னை

இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

1st Oct 2019 03:27 AM

ADVERTISEMENT


தண்டையார்பேட்டை, மயிலாப்பூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தண்டையார்பேட்டை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், அக்.1-ஆம் தேதி (செவ்வாய்) காலை 11 மணியளவில், டி.எச்.சாலையில் உள்ள தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதே போல் மயிலாப்பூர் கோட்டத்துக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், அன்றைய தினம் காலை 10.30 மணியளவில், எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள மயிலாப்பூர் கூடுதல் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கோட்டங்களுக்குட்பட்ட பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT