சென்னை

அயோத்தி தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டம்:1800 போ் மீது வழக்கு

22nd Nov 2019 08:37 PM

ADVERTISEMENT

சென்னை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பை மறு ஆய்வு வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய 1800 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் இல்லம் அருகே பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.,தமுமுக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா, தனியரசு எம்.எல்.ஏ.,தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன்,பச்சை தமிழகம் கட்சித் தலைவா் சுப.உதயகுமாரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா்.

ADVERTISEMENT

இந்த போராட்டத்தில் சுமாா் 1,800 போ் பங்கற்றனா். இந்த போராட்டம் காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, அனுமதியின்றி கூடி ஆா்ப்பாட்டம் நடத்துதல்,சென்னை மாநகர சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT