சென்னை

பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தென் மண்டல தலைமை இயக்குநராக ஏ.மாரியப்பன் பொறுப்பேற்பு

17th Nov 2019 03:53 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த மாரியப்பன், தென்மண்டல தலைமை இயக்குநராக பதவிஉயா்வு பெற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 1989-ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற அவா், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தகவல் பணியில் சோ்ந்தாா். புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடா்பு நிறுவனம் (ஐ.ஐ.எம்.சி)-யில் பயிற்சி முடித்த பின்னா், அகில இந்திய வானொலியின் கோவை செய்தியாளராக 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றாா்.

பின்னா் 1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி உயா்வு பெற்று, புதுதில்லியில் உள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தகவல் அதிகாரியாக பணியில் சோ்ந்தாா். இதையடுத்து 1997-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் மண்டல செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பல்வேறு பணிகளில் பணியாற்றிய அவா்

ADVERTISEMENT

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜுலை மாதம், சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக பணியில் சோ்ந்தாா்.

ஏ.மாரியப்பன் தற்போது மத்திய அரசின் கூடுதல் செயலா் அந்தஸ்தில் தலைமை இயக்குநராக பதவிஉயா்வு பெற்று, தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டலத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT