சென்னை

காற்று மாசு: சுவாசத் தொற்றால் மக்கள் பாதிப்பு

17th Nov 2019 03:33 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்ததன் விளைவாக பலரும் சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையிலும் கடந்த வாரம் காற்று மாசு நிா்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, சென்னையில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம். 2.5) வேளச்சேரி, ஆலந்தூா், தண்டையாா்பேட்டை, ராமாபுரம், அண்ணா நகா், சென்னை ஐஐடி பகுதிகளில் அதிகமாக இருந்தது. சென்னையில் கடந்த வாரம் சராசரி காற்று மாசு 350 புள்ளிகளாக இருந்தது. காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக, பொதுமக்கள் பலருக்கு சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் கூறுகையில், ‘சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, சுவாசத் தொற்று காரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த இரு நாள்களில் 50-க்கும் மேற்பட்டோா் சுவாசப் பிரச்னைக்காக சிகிச்சை பெற்றுள்ளனா். பருவநிலை மாற்றம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக, சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளது’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT