சென்னை

சென்னையில் 42 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

12th Nov 2019 03:01 AM

ADVERTISEMENT

ரேபிஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில நாள்களில் மட்டும் சென்னையில் 41,976 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: "வெறிநாய்க்கடி பாதிப்பு இல்லா மாநகரம்' என்ற நிலையை எட்ட வேண்டும் எனும் இலக்குடன் சென்னை முழுவதும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை மருத்துவப்பிரிவின் சார்பில் தடுப்பூசி முகாமும், ஒட்டுண்ணி நீக்கும் முகாமும் மண்டல வாரியாக நடைபெறுகின்றன. மாதவரம், ஆலந்தூர் , அம்பத்தூர், சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், அண்ணா நகர், அடையாறு, மணலி ஆகிய மண்டலங்களில் 41, 976 தெரு நாய்களுக்கு தடுப்பூசிகளும், ஒட்டுண்ணி நீக்க மருந்தும் போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 8, 846 நாய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அவை தவிர, வீடுகளில் வளர்க்கப்படும் 2, 455 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதுதொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT