சென்னை

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை: நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

12th Nov 2019 03:02 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற, வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள், மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த) மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. 
ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ( தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உள்பட ) பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதனைப் பெற www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT