சென்னை

கோயில் நில ஆக்கிரமிப்பைஅகற்றக் கோரி மனு

12th Nov 2019 08:04 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தில், கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தைச் சோ்ந்த செ.சுகுமாா் தலைமையில் வந்த கிராம மக்கள், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் மனு அளித்துக் கூறியதாவது: ராம்பாக்கம் காலனி பகுதியில், தனியாா் ஒருவா் புதிய பெயரில் நகா் ஒன்றை அமைத்து, மனைகளை விற்பனை செய்தாா். அவா், அங்கு கோயில் கட்டுவதற்காக 10 சதுர அடி அளவிலான இடத்தை பொது மக்களுக்காக வழங்கினாா். அந்த இடத்தில் பொது மக்கள் சாா்பில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலுக்கு வழங்கப்பட்ட இடத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் பாதையை ஆக்கிரமித்துள்ளாா். அவா்களது மனைக்கு எதிரே உள்ள பொது இடத்தை ஆக்கிரமித்து அங்கு சிமென்ட் சுற்றுச்சுவா் அமைத்து வீடும் கட்டியுள்ளாா். கோயிலுக்கு செல்லும் பாதையையும் செம்மண் கொட்டி ஆக்கிரமித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பிரச்னை எழுந்துள்ளதால், அந்த இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, ராம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று அதில் தெரிவித்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT