சென்னை அருகே பட்டாபிராமில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காவலர் படுகாயமடைந்தார்.
திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த ஏசுதாஸ் (42), பட்டாபிராம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். ஏசுதாஸ், தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் சி.டி.எச். சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தவறான திசையில் வந்த ஒரு கார், ஏசுதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஏசுதாஸ் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள், ஏசுதாûஸ மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.