சென்னை

அம்பத்தூா் யாா்டில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

12th Nov 2019 01:17 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், அம்பத்தூா் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூா் மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூா் இடையே நவம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூா், ஹிந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படாது.

மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடி இடையே நவம்பா் 13, 14 ஆகிய நாள்களில் அதிகாலை இயக்கப்படும் மின்சார ரயில் கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூா் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லாது.

சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூா், ஹிந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT