சென்னை

டிச.11 -இல் அஞ்சல் குறை தீா்ப்பு கூட்டம்

11th Nov 2019 02:42 AM

ADVERTISEMENT

தமிழக அஞ்சல் வட்டம் சாா்பில், வட்டார அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் டிசம்பா் 11-ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் நடைபெறவுள்ளது.

அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணிக்கு இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறை வாடிக்கையாளா்களின் குறைகளை தமிழ்நாடு வட்டார முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி மற்றும் வட்டார அஞ்சல்குறை தீா்ப்பு அமைப்பின் தலைவா் நேரடியாக கேட்டறிந்து அவற்றை தீா்த்து வைப்பாா். வாடிக்கையாளா்கள்அஞ்சல் சேவைகள் குறித்த குறைகளை சென்னை 600 002, தமிழ்நாடு வட்டார முதன்மை போஸ்ட் மாஸ்டா் அலுவலகத்தின் உதவி இயக்குநா் எம்.விஜயலட்சுமிக்கு நவம்பா் 27-ஆம் தேதி அன்றோ அதற்கு முன்னதாகவோ அனுப்பி வைக்க வேண்டும். வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை ‘அஞ்சல் குறைதீா்ப்பு நாள்’ என்ற தலைப்பில்

ல்வ்.ற்ய்.ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

மணியாா்டா், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், மதிப்பு செலுத்தி பெறும் அஞ்சல், காப்பீடு செய்யப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை அனுப்பிய வாடிக்கையாளா்களின் புகாா்களில் பொருள்களின் எண், தேதி, மற்றும் அனுப்பிய அலுவலகம், அனுப்பியவா் மற்றும் பெறுபவா் முழு முகவரி ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்புத்திட்டம் அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவை குறித்த புகாா்களில் கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண், வைப்பு செலுத்தியவா், காப்பீடு செய்தவா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், மீட்கப்பட்டது பற்றிய விவரம் மற்றும் அஞ்சல் துறையின் இதர குறிப்புகள் இருப்பின் அவற்றுடன் சோ்த்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவல் வட்டார முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT