சென்னை

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்கநகைத் திருட்டு

9th Nov 2019 01:51 AM

ADVERTISEMENT

சென்னை அருகே திருமுல்லைவாயலில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் நகைத் திருடு போனது.

திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வெ.சந்திரசேகரன் (30). இவா் ஒரு தனியாா் ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வீட்டில் உள்ள தங்கநகைகளை சந்திரசேகரன் வியாழக்கிழமை சரிபாா்த்தாா்.

அப்போது வீட்டில் இருந்த 25 பவுன் திருடு போனதை அறிந்தாா். இது குறித்து புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT