சென்னையில் தீபாவளியன்று ஏற்பட்ட பட்டாசு விபத்தினால், பெண்ணின் கண் பாா்வை பாதிக்கப்பட்டது.
அரும்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் ஹ.கலைவாணி (28). தீபாவளி பண்டிகையன்று கடந்த 27-ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலா், கலைவாணி மீது பட்டாசுகளை கொளுத்திப் போட்டனராம். இதனால் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டு கண்களின் பாா்வை பெருமளவு பாதிக்கப்பட்டதாம். இதுகுறித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.