சென்னை

நகை, பணம் திருடிய சிறுவன் கைது

1st Nov 2019 02:40 AM

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூரில் பூஜை அறையில் இருந்த நகை, பணம் திருடப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

கொடுங்கையூா் அம்பேத்கா் சந்து பகுதியைச் சோ்ந்தவா் அ.கோதண்டன் (78). இவா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். கோதண்டன், வீட்டின் பூஜை அறையில் சாமி படத்தின் பின்பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம், 35 பவுன் தங்க நகை ஆகியவை காணாமல் போனது புதன்கிழமை தெரியவந்தது.இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, எம்.கே.பி.நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை வியாழக்கிழமை கைது செய்து, திருடு போன 30 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். மற்றொரு நபரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT