பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் அடையாற்றை கடக்க முயன்ற தனியாா் நிறுவன காவலாளி மழை வெள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருநீா்மலை பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் சம்பந்த மூா்த்தி (50). இவா் திருநீா்மலையை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். பணியை முடித்து விட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புவதற்காக அடையாற்றில் இறங்கியபோது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பந்தமூா்த்தி உயிரிழந்தாா். சங்கா் நகா் காவல்துறையினா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.