புதன்கிழமை 26 ஜூன் 2019

துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு

DIN | Published: 24th May 2019 04:26 AM

தி.மு.க., பொருளாளர் துரைமுருகனுக்கு திடீரென புதன்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் துரைமுருகனுக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து துரைமுருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும், அதன் பயனாக துரைமுருகன் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். பின்னர் வியாழக்கிழமை இரவு, திமுக தலைவர் ஸ்டாலினுடன் சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துரைமுருகனும் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்: நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
கவிஞர் முத்துலிங்கம் நூல் நாளை வெளியீடு
சீர்மிகு நகரத் திட்டம்: சென்னைக்கு மத்திய அரசு ரூ.196 கோடி விடுவிப்பு
வேளச்சேரியில் குழாய் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் போராட்டம்
குழந்தைத் தொழிலாளர் மீட்பு