திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

சென்னையில் ஃபர்னிச்சர் கண்காட்சி: இன்று தொடக்கம்

DIN | Published: 24th May 2019 04:57 AM

"ஃபர்னிச்சர் மற்றும் இன்டிரியர் எக்ஸ்போ' எனும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கண்காட்சி, வெள்ளிக்கிழமை தொடங்கி 27-ஆம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக  மையத்தில் நடைபெற உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள 150 அரங்குகளில் 900-க்கும் மேற்பட்ட தீம்களில் படுக்கையறை ஃபர்னிச்சர்கள் இடம்பெறுகின்றன. 
அனைத்து ஃபர்னிச்சர்களுக்கும் மூன்று முதல் ஐந்தாண்டு உத்தரவாதம் வழங்கப்படுகின்றன. 
இது தவிர ஆடவர், மகளிருக்கான அனைத்து வகை ஆடை, நகைகள், சுவர் அலங்கார பொருள்கள், விரிப்புகள், மெத்தைகள், கைவினை உள்ளறை அலங்கார பொருள்கள், சோலார் தயாரிப்புகள், யூ.பி.எஸ். மற்றும் இன்வெர்டர் என பல்வேறு பொருள்களும் இடம்பெற உள்ளன. 
உற்பத்தி விலைக்கே பொருள்கள் கிடைப்பதோடு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக பொருள்களை சுலபத் தவணையில் பெற கடனு
தவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்
ளது.
நான்கு நாள்களும் காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

3-ஆக பிரிக்கப்படுமா சென்னை மாநகராட்சி?
வன உயிரின வாரம்: மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்
இறந்த காலத்தை சேமித்து வைத்திருக்கும் களஞ்சியம் நூலகம்
ஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை
ஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை