மே 27 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார்


நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. இதனால்,  பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இந்நிலையில், வரும் 27-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியது: நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும். தண்ணீர் லாரிகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com