உயர்நீதிமன்ற கோடை விடுமுறைகால நீதிமன்ற சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை விடுமுறை என்பதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
உயர்நீதிமன்ற கோடை விடுமுறைகால நீதிமன்ற சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை விடுமுறை என்பதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடைகால விடுமுறை விடப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமர்வுகளில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படும். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன்,  சுப்ரமணியம்பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ்,  ஜி.கே.இளந்திரையன்  சி.வி.கார்த்திக்கேயன், கிருஷ்ணன் ராமசாமி, வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா,  ஆர்.எம்.டி.டீக்காராமன்,  பி.டி.ஆதிகேசவலு, பி.ராஜமாணிக்கம், சி.சரவணன், என்.சதீஷ்குமார், பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள்.
இதே போன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி, டி.கிருஷ்ணவள்ளி  ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி, பி.புகழேந்தி, எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.ஹேமலதா, எஸ்.ராமதிலகம் , ஆர்.தாரணி, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரிக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com