மெட்ரோ ரயிலில் மாதாந்திர சுற்றுலா பயண அட்டை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய மாதாந்திர சுற்றுலா பயண அட்டை மூலம், மெட்ரோ ரயில்களில் 30 நாள்களும் எத்தனை முறை வேண்டுமானால் பயணம் மேற்கொள்ளலாம்.
மெட்ரோ ரயிலில் மாதாந்திர சுற்றுலா பயண அட்டை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய மாதாந்திர சுற்றுலா பயண அட்டை மூலம், மெட்ரோ ரயில்களில் 30 நாள்களும் எத்தனை முறை வேண்டுமானால் பயணம் மேற்கொள்ளலாம்.

 சென்னையில், வண்ணாரப்பேட்டையிலிருந்து, விமானநிலையம் வரையும், சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து, பரங்கிமலை வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில், தினமும் சராசரி 90,000 முதல் 1 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, மெட்ரோ ரயிலில் பயணிக்க, டோக்கன், பயண அட்டை, ட்ரிப் அட்டை, டிராவல் அட்டை போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.

இதில், டிராவல்அட்டைக்கு 10 சதவீதமும், ட்ரிப் அட்டைக்கு 20 சதவீதமும் கட்டணச் சலுகை பெறலாம். ரூ.150 கட்டணத்தில் சுற்றுலா அட்டை வாங்கினால், ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளைக் கவரும் நோக்கில், தற்போது, மாதாந்திர சுற்றுலா அட்டை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ரூ.2,550 செலுத்தி வாங்கும் சுற்றுலா அட்டை மூலம், 30 நாள்களும் மெட்ரோ ரயில்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்த நிலையத்திலும் ஏறி, எந்த நிலையத்திலும் இறங்கிக் கொள்ளலாம். 30 நாள்கள் முடிந்ததும், அட்டையை, மெட்ரோ ரயில் நிலைய கவுன்டரில் ஒப்படைத்தால், ரூ.50 தொகையைத் திரும்ப பெறலாம்.

 இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறியது: சுற்றுலா மாதாந்திர அட்டையை கட்டணம் செலுத்தி வாங்கியபிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் ரத்து செய்ய முடியாது. இடையில் ரத்து செய்ய விரும்பினால், அதன் வைப்பு தொகை ரூ.50 மட்டுமே திரும்ப கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com