கவிஞர் முத்துலிங்கம் நூல் நாளை வெளியீடு

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய  ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்னும்  நூல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.


கவிஞர் முத்துலிங்கம் எழுதிய  ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்னும்  நூல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து, நூலை வெளியிட்டு  சிறப்புரையாற்றுகிறார். முதல் நூலை, மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன்  பெறுகிறார்.
விழாவில், உலக எம்.ஜி.ஆர். பேரவைத் தலைவர் சைதை துரைசாமி, ரஷிய கலாசார மைய இயக்குநர் கென்னடி எரெக்கேலோ, மக்கள் கவிஞர் அறக்கட்டளை தலைவர் மெய் ரூஸ்வெல்ட்  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ்,   இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 
முன்னதாக, கவிதை உறவு ஆசிரியர்  ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் வரவேற்றுப் பேசுகிறார்.  கவிஞர் முத்துலிங்கம் ஏற்புரை வழங்குகிறார். வானதி பதிப்பக பதிப்பாளர் இராமநாதன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியில் முனைவர் பெ.கி.பிரபாகரன், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com