சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காய்கறி, பழங்களை அனுப்ப சிறப்பு கவுன்ட்டர்

எளிதில் அழுகக்கூடிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருளை அனுப்ப சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் கவுன்ட்டரில் சிறப்பு ஏற்பாடு


எளிதில் அழுகக்கூடிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருளை அனுப்ப சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் கவுன்ட்டரில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் மூலம்  ரயிலில் வெளியூர்களுக்கு  அனுப்பப்படும் எளிதில் அழுகக்கூடிய காய்கறிகள், பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய சிறப்பு பார்சல் கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், பதிவுக்கு வரும் பார்சல்கள் ஒரு இடத்தில் குவித்து வைக்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விரைவில் வெளியூர்களுக்கு  அனுப்பப்படும். 
பாதுகாப்பு கருதி, ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படும் பார்சல்கள் அனைத்தும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்ட பிறகே, பதிவு செய்யப்படுகின்றன.
இந்த கவுன்ட்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பார்சல் முன்பதிவு செய்யும்போது, ஏதாவது பிரச்னை என்றால், www.coms.indianrailways.gov.in  என்ற இணையதளத்திலும், 138 என்னும் தொலைபேசி எண்ணிலும், ஃஙஅநஜ138 என்ற சுட்டுரை கணக்கிலும் புகார் தெரிவிக்கலாம். 
இந்தத் தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com