உறுப்பு தானம்: ஐஎம்ஏ - அப்பல்லோ புரிந்துணர்வு

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) பெண் மருத்துவர்கள் பிரிவினருடன்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) பெண் மருத்துவர்கள் பிரிவினருடன் அப்பல்லோ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக அளவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களுக்கு உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் அனைவருக்கும் உடல் உறுப்புகள் தானமாக கிடைப்பதில்லை. இந்தியாவைப் பொருத்தவரை 10 லட்சம் பேரில் ஒரு சதவிதத்துக்கும் குறைவானர்கள் மட்டுமே உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வருகின்றனர்.
நாட்டில் ஆண்டுக்கு  ஆயிரம் பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று கல்லீரல் கிடைக்காமல் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று 2.25 லட்சம் பேர் சிறுநீரகங்களுக்காக காத்திருக்கும் நிலையில் வெறும் 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே அந்த உறுப்புகள் தானமாக கிடைக்கின்றன. இந்த நிலையை மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com