தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகரிப்பு: தகவல் கொடுத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள், நெகிழி பாட்டில்களில் அடைக்கப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகரிப்பு: தகவல் கொடுத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள், நெகிழி பாட்டில்களில் அடைக்கப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

துபோன்று போலியான நிறுவனங்களின் பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் கொடுத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னை ஒருபுறம் தீவிரமாகிக் கொண்டே வரும் நிலையில், மற்றொரு புறம் சுகாதாரமற்ற குடிநீரை விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர் சிலர். தமிழகத்தின் பல நகரங்களிலும் கேன்களில் பல நாள்களாக அடைத்து வைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரால், உடலுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கோடை வெயில் இன்னும் குறையாத நிலையில் சிறிய மளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை "கேன் குடிநீர்' விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.  எனினும் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் குழாய்களிலும், நேரடியாக லாரிகளிலும் தண்ணீரைப் பிடித்து வடிகட்டி கேன்களின் அடைத்து விற்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

25 சதவீதம் அளவுக்கு...: தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனையாகும் சூழலில் அதில் நான்கில் ஒரு பகுதி அதாவது 25 சதவீதம் அளவுக்கு சுகாதாரமற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியது: 

பேருந்து நிலையங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் தினமும் சோதனை மேற்கொண்டு அதிகளவில் குடிநீர் பாட்டில்கள், கேன்களை பறிமுதல் செய்து வருகிறோம். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருவதுடன் அவர்களை அழைத்து தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறோம். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்கள், பாட்டில்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குடிநீர் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி செய்யப்படும் தேதியை உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். 

விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: முக்கியமாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். 

இதேபோல், ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும்.  குறிப்பாக, எந்த நிறுவனத்தின் தண்ணீர் கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும். 

20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் கேன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். 

கட்செவி எண்ணுக்கு...: இதேபோல்  தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உற்பத்தியாளர்கள் எடுத்துக்கூற வேண்டும். சான்றிதழ் இல்லாமல் நடத்தினால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 

அதற்காக 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.  இதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக செயல்படும் நிறுவனங்கள் குறித்தும் இந்த எண்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 

பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.  இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com