புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கலந்துரையாடல் சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்வியின் தேவைகள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஜி. சேதுராமன், காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஜி. சேதுராமன், பேராசிரியர் பி. ராமசாமி, கே.எஃப்.ஐ. பள்ளி முதல்வர் ஜெயஸ்ரீ நம்பியார், யுனிசெஃப் அமைப்பின் கல்விப் பிரிவு அதிகாரி அகிலா ராதாகிருஷ்ணன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜான்தியாலா பி.ஜி. திலக், டி.ஜி.வைணவக் கல்லூரியின் செயலர் அசோக்குமார் முந்த்ரா, முதல்வர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இதில் கல்வியாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.