சென்னை

நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

29th Jul 2019 05:06 AM

ADVERTISEMENT

 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT