சென்னை

பீடி, சுரங்கம், சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

22nd Jul 2019 03:52 AM

ADVERTISEMENT

 

மத்திய தொழிலாளர்-வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி,  சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு,  புதுச்சேரி  மத்திய நல ஆணையர் பழ.ராஜேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 

மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம்  வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு,  2019-20- ஆம் நிதிஆண்டில்  ரூ.250 முதல் ரூ.15 ஆயிரம் வரை  கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ADVERTISEMENT

உதவித்தொகை பெற விரும்புவோர் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.   

விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய  சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே,  கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர். இத்திட்டத்தின்கீழ், கல்விநிதி உதவித் தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கவேண்டும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். பதிவு  செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள்,   ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற,  தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். 

பின்னர்  மேற்குறிப்பிட்ட வலைதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழி காட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் அக்டோபர்30 ஆகும். 

இந்த உதவித்தொகை தொடர்பாக மேலும் விளக்கங்கள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு,  "மத்தியநல ஆணையர் அலுவலகம்,  தொழிலாளர் நலஅமைப்பு, 8-2ஏ, செயிண்ட் தாமஸ் சாலை,  மேட்டுதிடல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627011 என்ற முகவரியிலும், www.scholarships.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் 0462 - 2578266  என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT