மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மாதவரம், திருவொற்றியூரில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள


சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மாதவரம், திருவொற்றியூரில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதவரம், திருவொற்றியூரில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த விடுதிகளில் மாணவர்களுக்கு தங்கும் இடமும், உணவும் இலவசமாக வழங்கப்படும்.
தகுதி: பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஆண்டு வருமானம், ஜாதிச் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது, இச்சான்றிதழ்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com