திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

சென்னையில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

DIN | Published: 16th July 2019 04:28 AM


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 11 பேரிடம் இருந்து உடல் உறுப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து,  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த  ஹமீது குர்ஃபான் பாதுஷா, மீரா ஹூசைன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ணு, சையது அலி உள்ளிட்ட 11 பேரிடம் சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். 
அதில், அவர்கள் உடலுறுப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை  பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னையில் பரவலாக மழை
சென்னையில் அணிவகுத்த பழங்கால கார்கள்
ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
பள்ளிகளில் தேசிய பசுமைப்படை: இரு மடங்காக அதிகரிக்க முடிவு