போரூர் கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 1 ஆவது தளம், 110 கி.வோ (எஸ்ஆர்எம்சி) துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர்/ போரூர் அலுவலகம் என்னும் முகவரியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், போரூர் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு குறைகளைக் கூறி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.