பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த, சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை பெற தகுதியுள்ளோர், ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு, சிறந்த சேவை புரிந்த, சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், அடுத்த மாதம் நடக்க உள்ள சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளன. மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில், மகளிர் நலனுக்காக பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 19-ஆம் தேதிக்குள், மாவட்ட சமூக நல அலுவலர்களை அணுகி கருத்துகளை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை தரப்படும். மாதிரி விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் குறித்த விவரங்களை nsocialwelfare.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.