சென்னை

போலி வணிக வரித்துறை அதிகாரி கைது

12th Jul 2019 04:24 AM

ADVERTISEMENT


வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சிந்தாதிரிப்பேட்டை பழைய பங்களா தெருவில் பீடி, சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வருபவர் சிவலிங்கம் (44). இவரது கடைக்கு 4 மாதங்களுக்கு முன்பு காரில் வந்த ஒரு நபர், தன்னை வணிகவரித்துறை அதிகாரி என்று கூறி, சிவலிங்கத்தை மிரட்டி ரூ.5 ஆயிரம் பெற்றுச் சென்றாராம். இதையடுத்து, அதே நபர், மீண்டும் புதன்கிழமை வந்து சிவலிங்கத்திடம்  ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி மிரட்டினாராம்.
அந்த நபரின் நடவடிக்கையில் சிவலிங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டு,  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற அந்த நபரைப்பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கீழ்ப்பாக்கம் ஒசான்குளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பழனிவேல் (48) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் பழனிவேலை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT