சென்னை

பள்ளி மாணவர்களுடன் டி.ஜி.பி. கலந்துரையாடல்

4th Jul 2019 04:31 AM

ADVERTISEMENT


தமிழக காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் வெள்ளி விழாவையொட்டி, தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, அந்த குழுமத்தின் ஏ.டி.ஜி.பி. வன்னியப்பெருமாள் தலைமை வகித்தார். அந்தக் குழுமத்தின் டி.ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, கமாண்டன்ட் சரோஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.  ஜே.கே.திரிபாதி பங்கேற்று, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.  
அவர் பேசுகையில், மாணவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு விழிப்புடன் செயல்படுவது அவசியம் என தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜெயந்த் முரளி வாழ்த்தி பேசினார். கடலோரப் பாதுகாப்பு தொடர்பான கட்டுரைப்  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் எஸ்.பி. செல்வநாகரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.             


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT