சென்னை

கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

4th Jul 2019 04:30 AM

ADVERTISEMENT


கடந்த 2011-ஆம் ஆண்டு வடபழனியில் நடந்த கொலை வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
சென்னை வடபழனி அழகிரி நகரைச் சேர்ந்தவர் விஜிகுட்டன். இவர், தனது நண்பருக்கு ராஜா என்பவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ராஜாவிடம் பெற்ற கடனை, விஜிகுட்டன் தனது நண்பரிடமிருந்து வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, இந்த விவகாரத்தை தனது உறவினரான மகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன், தனது நண்பர்களான ரமேஷ், பூபதி ஆகியோருடன் கடந்த 2011-ஆம் ஆண்டு விஜிகுட்டன் வீட்டுக்குச் சென்று, கடனைத் திரும்பக் கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விஜிகுட்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். 
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடபழனி போலீஸார், மகேஸ்வரன், ரமேஷ் மற்றும் பூபதி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், மகேஸ்வரன், ரமேஷ் மற்றும் பூபதி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT