சென்னை

காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு: மதுரை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

2nd Jul 2019 04:21 AM

ADVERTISEMENT


 மதுரையில் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டனை (28) அடிதடி, திருட்டு வழக்கு தொடர்பாக கரிமேடு போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து  கடந்த சனிக்கிழமை விசாரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
தாமாக முன்வந்து வழக்கு: அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் இது தொடர்பாக தாமாக முன்வந்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தார். மேலும், மணிகண்டன் உயிரிழந்தது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் விரிவாக விசாரணை நடத்தி, 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT