குப்பைகளைத் தரம் பிரித்து  அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளைத் தேடி வரும் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளைத் தேடி வரும் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 கோட்டங்களில் திடக்கழிவு மேலாண்மைத் துறை சார்பில் 19,158 துப்புரவுப் பணியாளர்கள், 5,482 மூன்று சக்கர மிதிவண்டிகள், 14,500 குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவை மூலம் நாள்தோறும் 2, 322 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள், 3,078 மக்காத குப்பைகள் என நாள்தோறும் சுமார் 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 
இதில், மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு 176 மையங்களில் உரம், எரிவாயு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.மேலும், ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் 365 மெட்ரிக். டன் மக்காத குப்பைகள் தூளாக்கப்பட்டு தார் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. 
எனவே, உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளைத் தனியாகவும், பிளாஸ்டிக், கண்ணாடி, தோல் பொருள்கள், இரும்பு, ரப்பர் பொருள்கள் போன்ற மக்காத குப்பைகளைத் தனியாகவும், வெடி பொருட்கள், ரசாயனப் பொருள்கள், மருத்துவக் கழிவுகள் போன்ற நச்சுக் கழிவுகளைத் தனியாகவும் தரம் பிரித்து  துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அதில்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com